நேற்று பாஜகவில் இருந்து விலகிய நடிகை இன்று தவெகவில்.. ஏன் என விளக்கம்..!
Webdunia Tamil February 27, 2025 02:48 AM

நேற்று பாஜகவில் இருந்து விலகிய நடிகை ரஞ்சனா நாச்சியார் இன்று தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளார். இதுகுறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.

பாஜகவில் 8 ஆண்டுகள் ரஞ்சனா நாச்சியார் இருந்த நிலையில், திடீரென நேற்று அவர் விலகினார். தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை விடுவிக்கவில்லை என்ற காரணத்தை காட்டி, அவர் பாஜகவில் இருந்து விலகியுள்ளார்.

இன்று, அவர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளார். இதுகுறித்து விளக்கம் அளிக்கும்போது,

எனது பயணம் இனி வெற்றி பயணமாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். தமிழக வெற்றி கழகம் தமிழ்நாட்டை வெற்றிகளமாக மாற்றும் என்பது எனது நம்பிக்கை. நாளைய இளைஞர்கள் முன்னோடியாக இருக்கப்போகும் கட்சியும் இதுதான்.

இந்தக் கட்சியில் இணைந்தால், என்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்று நம்பியதால் தான் இணைந்துள்ளேன். தமிழ்நாட்டில் தமிழச்சியாக, தமிழ் மொழிக்காக நிற்க வேண்டும். அதற்காக தான் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தேன்,"

என்று அவர் கூறியுள்ளார்.

Edited by Siva

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.