கடலூரில் அதிர்ச்சி - அடுத்தடுத்து காணாமல் போன இளைஞர்கள் - நடந்தது என்ன?
Seithipunal Tamil February 27, 2025 04:48 AM

கடலூர் மாவட்டத்தில் உள்ள எம்.புதூர் பகுதியில் வசித்து வந்த சரண்ராஜ் மற்றும் டி.புதூர் பகுதியில் வசித்து வந்த அற்புதராஜ் இருவரையும் காணவில்லை என்று அவர்களது பெற்றோர்கள் பிப்ரவரி 1ஆம் தேதி காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். 

அதன் படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்த நிலையில், இளைஞர்கள் காணாமல்போன விவகாரத்தில் அவர்களது நண்பர்களுக்கு தொடர்பு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, போலீசார் 5 பேரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர்கள் இருவரையும் கொலை செய்து புதைத்ததாக தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று இருவரது உடல்களையும் தோண்டி எடுத்தனர். 

பின்னர், 2 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்படவுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் நண்பர்கள் 5 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.