“கள்ளக்காதலியுடன் தனிமையில்….” உறவினர்களுடன் சேர்ந்து கணவரை அடித்து துவைத்த பெண்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!
SeithiSolai Tamil February 27, 2025 04:48 AM

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் சேர்ந்தவர் ஜானகிராம். இவரது மனைவி கல்யாணி. இந்த நிலையில் ஜானகிராம் அடிக்கடி செல்போனில் யாரிடமோ பேசி வந்துள்ளார். கடந்த 21-ஆம் தேதி வீட்டை விட்டு புறப்பட்டு சென்ற ஜானகிராமை கல்யாணி ரகசியமாக பின் தொடர்ந்து சென்றார். அப்போது வாராசிகுடாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஜானகிராம் ஒரு இளம் பெண்ணுடன் தனிமையில் இருந்தது தெரியவந்தது. உடனே கல்யாணி தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்தனர்.

இந்த நிலையில் கல்யாணி கதவை தட்டியவுடன் ஜானகிராம் தனது காதலியை குளியல் அறையில் பதுக்கி வைத்து விட்டு வெளியே வந்து நின்றார். இதை அறிந்த கல்யாணி கோபத்தில் உறவினர்களுடன் சேர்ந்து தனது கணவரை சரமாரியாக அடித்துள்ளார். அதன்பிறகு குளியல் அறையில் பதுங்கி இருந்த காதலியையும் சரமாரியாக அடித்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜானகி ராமையும், அவரது காதலியும் மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.