துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த அக்டோபர் மாதம் 'லக்கி பாஸ்கர்' படம் வெளியானது. வெங்கி அட்லுரி இந்தப் படத்தை இயக்கியிருந்தார். சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் பார்ச்சூன் போர் சினிமாஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இதில் துல்கர் சல்மான் உடன் இணைந்து மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார். படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.
அதாவது, படத்தில் சாதாரண நபரான நாயகன் அரசு மற்றும் வங்கி நிர்வாகத்தை ஏமாற்றி பெரும் செல்வந்தனாக மாறும் கதையாக உருவான இப்படம் தான் இந்த 'லக்கி பாஸ்கர்' வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம், சுமார் ரூ.120 கோடிக்கு அதிகமாக வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த மாதம் நவம்பர் 28-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியானது. இந்நிலையில், ஓ.டி.டி.யில் வெளியாகி 13 வாரங்கள் தொடர்ந்து டிரெண்டிங்கில் இருந்த முதல் தென்னிந்திய திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது இந்த 'லக்கி பாஸ்கர்' படம்.