கர்நாடக சட்டமன்றத்தில் MLA-க்கள் ஓய்வெடுக்க வாடகை சோஃபாக்கள்..! சபாநாயகரின் சர்ச்சை திட்டம்..!
Seithipunal Tamil February 27, 2025 11:48 AM

கர்நாடக சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஓய்வெடுப்பதற்கு   சோஃபாக்களை வாடகைக்கு எடுக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. 

கர்நாடக மாநில சபாநாயகர் யு.டி.காதர் உத்தரவை  பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு தற்போது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் சாப்பிட்டு முடித்த பின் ஓய்வெடுக்க வெளியில் செல்வதால் அவை நடவடிக்கைகளில் அவர்கள் பங்கேற்காத சூழல் உள்ளதாக குற்றசாட்டு எழுந்தது.

இந்நிலையில், சட்டமன்ற வளாகத்திற்குள்ளேயே சட்டமன்ற உறுப்பினர்கள் ஓய்வெடுக்க ரிக்லைனர்கள் வாங்க சபாநாயகர்  உத்தரவிட்டம குறிப்பிடத்தக்கது.


 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.