பொதுவாக சிலருக்கு வயிறு உப்பிசம் முதல் வாயு தொல்லை வரை இருந்து பாடாய் படுத்தி எடுக்கும் .இந்த கோளாறுகள் முதிய காலத்தில் இருந்தால் அது வயது முதிர்வின் காரணமாக இருக்கிறது என்று கூறலாம் ,ஆனால் இப்போதெல்லாம் இந்த பாஸ்ட் புட் கலாச்சாரத்தில் இளம் வயதினருக்கும் இந்த கோளாறுகள் இருந்து அவர்களை பாடாய் படுத்தி எடுக்கிறது . நம் வாழ்க்கை முறையில் சில மாற்றம் செய்தாலே இந்த பிரச்சினையை வென்று காமிக்கலாம்
1.செரிமான கோளாறு ஏற்படாமல் தடுக்க தினமும் 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
2.அவ்வாறு அதிகமாக தண்ணீர் குடிக்கும்போது, அது உடலில் மலச்சிக்கலை நீக்கி, மிக எளிதாக செரிமானம் நடைபெற வழிசெய்கிறது.
3.செரிமான கோளாறு ஏற்படாமல் தடுக்க சாப்பிடும் போது, முதலில் எளிதாக செரிமானமாகும் உணவுகளை சாப்பிட வேண்டும்.
4.அதற்கு பிறகு கடினமான மற்றும் சத்து அதிகமான உணவுகளைச் சாப்பிடுவது நல்லது.
5.செரிமான கோளாறு ஏற்படாமல் தடுக்க தினமும் எலுமிச்சைப் பழச்சாற்றை குடிப்பதால், வயிற்றில் இருக்கும் கழிவுகள் மற்றும் அளவுக்கு அதிகமான வாயுக்கள் போன்றவை நீங்கி செரிமானத்திற்கு உதவும்.
6.செரிமான கோளாறு ஏற்படாமல் தடுக்க உணவை நன்றாகக் கடித்து, மென்று சாப்பிடும்போது, உணவு செரிமானத்திற்கு தேவையான கார்போஹைட்ரேட் வாயில் உற்பத்தியாகிவிடும். இதனா செரிமானம் சீராக நடைபெறும்.