இனி அனைத்து பள்ளிகளிலும் தெலுங்கு பாடம் கட்டாயம்... தெலங்கானா அரசு உத்தரவு!!
Dinamaalai February 27, 2025 04:48 PM

இனி வரும் 2025 -26 கல்வியாண்டு முதல் அனைத்து விதமான பள்ளிகளிலும் தெலுங்கு மொழிப் பாடம் கட்டாயம் என தெலங்கானா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து முன்னதாக  தெலங்கானா மாநிலத்தில் கடந்த 2018ம் ஆண்டே அனைத்து பள்ளிகளிலும் தெலுங்கு மொழிப் பாடம் கட்டாயமாக்கி சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஆனால் கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த சட்டத்திருத்தம் தற்போது முறையாக நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்தது.

இந்நிலையில், தேசிய கல்விக் கொள்கையில் மும்மொழிப் பிரச்னை தீவிரமடைந்துள்ள சூழலில், தெலுங்கு மொழிப் பாடத்தைக் கட்டாயமாக்கி மாநில கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. வருகின்ற 2025 -26 கல்வியாண்டு முதல் தெலுங்கானா மாநிலத்தில் செயல்படு சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, ஐபி உள்பட அனைத்து பாடத்திட்டங்களில் இயங்கும் பள்ளிகளிலும் தெலுங்கு கட்டாயப் பாடமாக இருக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

1 முதல் 10ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தெலுங்கு கற்க வேண்டும் எனவும், வெளி மாநில மாணவர்கள் தெலுங்கு மொழியைக் கற்றுக் கொள்ளும் வகையில் பாடத்திட்டங்களை மாற்றி அமைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.