மக்களே உஷார்…! நெல்லை, குமரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!
SeithiSolai Tamil February 27, 2025 07:48 PM

திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், மதுரை ஆகிய 10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மேலும் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் நாளை மறுதினம் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.