மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழகம் வர இருந்த நிலையில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தமிழக பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
நாளை பிப்ரவரி 28ம் தேதி சென்னை ஐஐடியில் 'இன்வென்டிவ் 2025' நிகழ்ச்சியை மத்திய கல்வியமைச்சர் தர்மெந்திர பிரதான் துவக்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது தமிழக பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு தீவிர எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானின் சென்னை வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அவருக்கு பதிலாக மத்திய இணை அமைச்சர் சுகந்தா மஜும்தார் நிகழ்ச்சியை துவங்கி வைத்து பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.