எம்புள்ள போயிட்டான், கொன்னவன் வீட்டுக்கு பாதுகாப்பா? - தாயின் கண்ணீர் குமுறல்.. திணறித்தவித்த காவல்துறை.!
Tamilspark Tamil February 27, 2025 07:48 PM


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பிடாரம், ராஜாவின் கோவில் கிராமத்தில் வசித்து வருபவர் ஞானதுரை. இவரின் மகன் செல்வகுமார் (வயது 25). கடந்த ஜனவரி மாதம் நடந்த பொங்கல் பண்டிகையின்போது செல்வகுமார் மற்றும் அதே ஊரில் வசித்து வந்த விஜயசீலன் (வயது 26), ஆர்த்தி (வயது 26) ஆகியோர் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இந்த பிரச்சனை முன்விரோதமாக வளர, கடந்த பிப்.18 அன்று செல்வகுமாரின் மீது இமானுவேல் விஜயசீலன், ஆர்த்தி உட்பட 4 பேர் கும்பல் கடுமையாக தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் செல்வகுமார் படுகாயமடைய, தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தவர் கடந்த புதன்கிழமை அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடும் வாக்குவாதம்

இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த ஒட்டப்பிடாரம் காவல்துறையினர், கொலையாளிகளை தேடி வருகின்றனர். இதனிடையே, இமானுவேல் விஜயசீலன் வீட்டுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டது. இந்த தகவலை அறிந்த மறைந்த இளைஞர் செல்வகுமாரின் தாய், காவல் அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதம் செய்தார்.

இதையும் படிங்க:

தாயின் கண்ணீர்

"நான் தவமிருந்து பெற்றெடுத்த ஒரேயொரு பிள்ளை. அவனை கொன்றுவிட்டார்கள். கொலையாளிகளை கைது செய்ய உங்களால் முடியவில்லை. அவரது வீட்டிற்கு பாதுகாப்பு மட்டும் ஏன்? உங்களுக்கெல்லாம் மனசாட்சி இருக்கிறதா? ஜேசிபி கொண்டு அவன் வீட்டை நான் இடிக்கட்டுமா?

அப்படி நாங்கள் செய்யாமல் இருக்கிறோமே, உங்களின் மீது நம்பிக்கை வைத்துதானே. என்பிள்ளை உயிர் போய்விட்டது. அவர்களின் கை-கால்களை உடைத்து முடமாக்க வேண்டும். என் மகனின் மரணத்துக்கு நீதி வேண்டும்" என ஆதங்கத்தில் குமுறினார். அவரை உறவினர்கள் வந்து சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க:

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.