கடந்த 2010 ஆம் வருடம் கௌதம் வாசுதேவ்மேனன் இயக்கத்தில் வெளியான படம் விண்ணைத்தாண்டி வருவாயா. இந்த படத்தில் சிம்பு, திரிஷா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். விடிவி கணேஷ், கே எஸ் ரவிக்குமார், ஜனனி ஐயர் ஆகியோரோடு இணைந்து சமந்தா, நாக சைதன்யாவும் நடித்திருந்தார்கள். இந்த பாடத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார்.
காதலிப்பவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படங்களின் பட்டியலில் இந்த படம் நிச்சயம் இருக்கும். சிறந்த விமர்சனத்தை பெற்ற இந்த படம் பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை குவித்தது. இந்த நிலையில் இந்த படம் வெளியாகி இன்றோடு 15 வருடங்களை நிறைவு செய்கிறது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் நடிகர் சிம்பு நெகிழ்ச்சியான வீடியோ வெளியிட்டு உள்ளார்.