அந்த ஆசாமி, இளம்பெண்ணை பார்த்து சகோதரி... என்று கூறி நைசாக பேச்சு கொடுத்தான். நீங்கள் செல்ல வேண்டிய ஊருக்கு பஸ் இங்கு வராது என்று கூறியுள்ளான். இதையடுத்து பஸ் நிற்கும் பகுதிக்கு அழைத்து செல்வதாக கூறி, இளம்பெண்ணை அழைத்து சென்றான்.
பஸ் நிலையத்தின் ஒரு பகுதியில் நின்ற மாநில அரசு போக்குவரத்து கழகத்துக்கு (எம்.எஸ்.ஆர்.டி.சி.) சொந்தமான 'சிவ்சாகி' என்ற சொகுசு பஸ்சை காட்டி, இது தான் நீங்கள் போக வேண்டிய ஊருக்கு செல்லும் பஸ் என்று கூறியுள்ளான். அந்த பஸ்சில் இளம்பெண் ஏறியபோது, விளக்குகள் எல்லாம் அணைந்து கிடந்தது. டிரைவர், நடத்துனர் வந்த உடன் பஸ் கிளம்பி விடும் என கூறினான். இளம்பெண், பஸ்சுக்குள் ஏறிச்சென்றார். அந்த ஆசாமியும் பின்தொடர்ந்து பஸ்சில் ஏறினான். திடீரென பஸ்சின் கதவை பூட்டினான். அது ஏ.சி. பஸ் என்பதால் ஜன்னல் கண்ணாடிகள் அனைத்தும் அடைத்து வைக்கப்பட்டு இருந்தன.
அந்த ஆசாமி பெண்ணை பஸ்சுக்குள் பலாத்காரம் செய்துவிட்டு ஓடிவிட்டான். இந்த கொடூர சம்பவம் குறித்து தோழிக்கு போன் செய்து நடந்த சம்பவத்தை கூறி கதறி அழுதார். போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது.இது குறித்து வழக்குப்பதிவு செய்து. பஸ் நிலைய கண்காணிப்பு கேமரா காட்சியை ஆய்வு செய்தபோது, பலாத்கார ஆசாமியின் அடையாளம் தெரியவந்தது. அவன் புனே மாவட்டம் சிக்ராப்பூரை சேர்ந்த ராம்தாஸ் காடே (வயது36) என்பது தெரியவந்தது. அவனை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
இந்நிலையில் பஸ் ஸ்டாண்டில் 26 வயது பெண் பலாத்காரம் செய்யப்பட்ட பின், அங்கு நிறுத்தப்பட்டுள்ள சில பஸ்களில் 100-க்கணக்கான பயன்படுத்தப்பட்ட காண்டம், மதுபான பாட்டில்கள், சிகரெட் பாக்கெட்டுகள் & பெண்களின் அடைகள் காணப்பட்டன.
இந்த பஸ் ஸ்டாண்ட் ஒரு போலீஸ் ஸ்டேஷனிலிருந்து 100 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
இந்த தகவல் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.