அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று கோல்ட் கார்டு என்னும் விசா திட்டத்தை புதிதாக அறிமுகப்படுத்தினார்.
அதுக்குறித்து ட்ரம்ப் பேசியிருப்பதாவது, "கோல்ட் கார்டு சீக்கிரம் விற்று தீர்ந்துவிடும். அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள் இந்தியர்கள் உள்ளிட்ட பிற நாட்டு மக்களை வேலைக்கு எடுங்கள்.
இந்தியா, சீனா, ஜப்பான் நாடுகளில் இருந்து வருபவர்கள் ஹார்வார்ட், யாழ் மாதிரியான பெரிய பெரிய கல்லூரிகளில் படித்து, நம்பர் ஒன்னாக தேர்ச்சி பெறுகிறார்கள். ஆனால், அவர்களை வேலைக்கு எடுக்கும்போது, அவர்கள் நாட்டில் இருக்க முடியுமா... முடியாதா என்று யோசனை வருகிறது.
இந்த மாதிரியான தருணத்தில் நிறுவனங்கள் கோல்ட் கார்டை வாங்கி, அதை நிறுவனத்தின் ஆள்சேர்ப்பிற்கு பயன்படுத்திக்கொள்ளலாம்" என்று கூறியுள்ளார்.
ட்ரம்ப் கோல்டு கார்டு என்பது EB 5 விசாவிற்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்தகார்டை பெற ஒருவர் 5 மில்லியன் டாலர் அமெரிக்காவில் முதலீடு செய்திருக்க வேண்டும் என்பது இந்தக் கார்டை பெற உள்ள கண்டிஷன். இந்தக் கார்டை பெற்றால் அவர்களுக்கு அமெரிக்க குடியிரிமையும் கிடைக்கும்.
குடியுரிமை, வேலைவாய்ப்பு போன்றவற்றில் அதிரடி அறிவிப்புகளை குவித்து வந்த ட்ரம்பினால் பிற நாட்டு மக்கள் அமெரிக்காவிற்கு படிக்க செல்லவும், வேலை பார்க்க செல்லவும் தயக்கத்துடன் இருந்தனர். இந்த கோல்ட் கார்ட் இவர்களுக்கு அமெரிக்காவிற்கான 'ட்ரம்ப்' கார்டாக அமையலாம்.
Vikatan WhatsApp Channelஇணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK