மார்ச் 13, 14ம் தேதி உள்ளூர் விடுமுறை ... கலெக்டர்கள் திடீர் அறிவிப்பு!
Dinamaalai February 27, 2025 10:48 PM

மாசி மகம் மார்ச் 13ம் தேதி வியாழக்கிழமை காரைக்கால் மாவட்டத்திற்கும், மார்ச் 14ம் தேதி வெள்ளிக்கிழமை புதுச்சேரியில்  அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது.  இது குறித்த பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அன்றைய தினம் தேர்வுகள் இருந்தால் வழக்கம் போல நடைபெறும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஆண்டுதோறும் மாசி மகம் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. வைத்திக்குப்பம் கடற்கரையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் விழாவில் தமிழகம், புதுச்சேரியிலிருந்தும்  ஏராளமான கோயில்களை சேர்ந்த உற்சவர்கள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.


ஒரே இடத்தில் பல்வேறு கோயில்களின் உற்சவர்களும் எழுந்தருள்வதால் புதுச்சேரி மட்டுமின்றி தமிழகத்திலிருந்து   ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாசி மகத்திற்கு குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்வது வழக்கம். வைத்திக்குப்பம் கடற்கரையில் நடக்கும் மாசிமகம் தீர்த்தவாரி விழாவையொட்டி பக்கதர்கள் வசதி மற்றும் பாதுகாப்புக்காக பல்வேறு ஏற்பாடுகளை அரசு நிர்வகம் செய்து வருகிறது. திருட்டு, மோதல் போன்ற அசம்பாவிதங்களை தடுக்க சிசிடிவி கண்காணிப்பு உட்பட பல  பணிகளும் செய்யப்பட்டு வருகின்றன.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.