கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடிப்பில் வெளியான `விண்ணைத் தாண்டி வருவாயா' படம் வெளியாகி 15 ஆண்டுகள் முடிந்திருக்கிறது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அழகான பாடல்களுடன் வெளியான இந்த திரைப்படம், ரசிகர்களின் மனதை வென்றது. இன்றளவும் காதலர்களின் முதன்மை திரைப்பட தேர்வாக இருக்கிறது. அதுவும், திரையரங்குகளில்!
ரஜினியின் `சந்திரமுகி' சாந்தி திரையரங்கில் 800 நாள்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. அப்படி ஒரு சாதனையை `விண்ணைத் தாண்டி வருவாயா' படமும் படைத்திருக்கிறது.
விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை படக் குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.
இரண்டாவது முறையாக வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் 1000 நாள்களைத் தாண்டி ஓடிக்கொண்டிருப்பதாக வி.டி.வி கணேஷ் மற்றும் சிம்பு வீடியோவில் நன்றி தெரிவித்திருந்தனர்.
தொடர்ந்து இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் த்ரிஷா விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படம் குறித்துப் பேசியுள்ளனர்.
Trisha பேசியது என்ன?இந்த படம் குறித்து வீடியோ வெளியிட்டுள்ள நடிகை த்ரிஷா, "வி.டி.வி குழுவினருக்கு வாழ்த்துகள். என்னுடைய கேரியரின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றைக் கொடுத்ததற்கு கௌதமுக்கு நன்றி. இன்றுவரை ஓடிக்கொண்டிருக்கும் படத்தில் ஒரு பகுதியாக இருப்பது மிகப் பெரிய கௌரவம்.
"இந்த படத்தை உருவாக்கியது சிறப்பானது. நான் இதைப் பலமுறை சொல்லியிருக்கிறேன். ஒரு படத்தை உருவாக்கும்போது நாம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தால் அந்த திரைப்படம் எப்படியோ சிறந்ததாக உருவாகிவிடும். அதனால்தான் வி.டி.வி என் இதயத்துக்கு நெருக்கமான படம்.
அந்த மொத்த அனுபவத்துக்காகவும் அதுமிக நெருக்கமானது. நாங்கள் செட்டில் மகிழ்ச்சியாக இருந்தோம். நல்ல நபர்களுடன் பணியாற்றினேன். அனைத்திருக்கும் நன்றி.
இன்றளவும் ஜெஸ்சியை உயிர்ப்புடன் வைத்திருக்கும் ரசிகர்களுக்கும், சுற்றத்தவருக்கும் சிறப்பு நன்றிகள். இப்போதும் எனக்கு ஜெஸ்ஸி குறித்து மீம்களை அனுப்புகின்றனர். தனிப்பட்ட மெஸ்ஸேஜ்களை அனுப்புகின்றனர். எல்லாருக்கும் நன்றி" எனப் பேசியுள்ளார்.
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK