சீமான் வீட்டு காவலாளி அமல்ராஜ் மற்றும் உதவியாளர் சுபாகர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு சீமான் வீட்டில் போலீசார் சம்மன் ஒட்டினர். மேலும் சீமான் நாளை காலை விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர். பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட போலீசாரின் சம்மனை கிழித்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சுபாகர் மற்றும் போலீசாரை தாக்கியதுடன் துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக கூறி சீமான் வீட்டின் காவலாளியையும் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் சீமான் வீட்டு காவலாளி அமல்ராஜ் மீது 5 பிரிவுகளிலும், உதவியாளர் சுபாகர் மீது 3 பிரிவுகளிலும் காவல்துறை வழக்குப்பதிவு செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.