சத்தீஸ்கர் மாநிலத்தில் தனியார் பள்ளியில் படிக்கும் சில மாணவர்கள் தங்களின் வகுப்பு ஆசிரியரை பழிவாங்குவதற்காக இணையத்தில் பல வழிகளைத் தேடி சோடியம் உடன் தண்ணீர் கலந்தால் வெடிக்கும் என்பதை அறிந்து ஆன்லைனில் சோடியம் வாங்கியுள்ளார்.
அதனை மாணவர்கள் கழிவறையில் வைத்து அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். ஆசிரியரை பழி வாங்க மாணவர்கள் செய்த சதி திட்டத்தில் சிறுமி சிக்கியுள்ளார். வெடி சத்தத்தையும் சிறுமியின் அலறல் சத்தத்தையும் கேட்ட பள்ளி ஊழியர்கள் ஓடி வந்து கதவை உடைத்து சிறுமியை மீட்டனர்.
சிறுமியின் உடலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டு இருந்ததால் அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், பள்ளியின் சிசிடிவி காட்சிகளை சோதனை செய்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக நான்கு மாணவர்களை கைது செய்து சிறுவர் சீர் திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ள மற்றொரு மாணவரை விரைவில் கைது செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.