உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வந்த நிலையில், நேற்றுடன் அந்த விழா நிறைவடைந்தது. அந்த விழாவில் சுமார் 68 கோடி பேர் புனித நீராடியுள்ளனர். மகா கும்பமேளாவில் சாதாரண மக்கள் முதல் ஜனாதிபதி, பிரதமர், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் என ஏராளமானோர் நீராடினர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மகா கும்பமேளா பற்றி ஒரு பதிவை போட்டுள்ளார். அதாவது மகா கும்பமேளாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்பது குறைவாக இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்டுள்ளார்.
அதன் பிறகு இவ்வளவு பிரம்மாண்ட நிகழ்வை செய்வது அவ்வளவு எளிது கிடையாது. எங்கள் பகுதியில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் கங்கை யமுனை சரஸ்வதி அன்னையிடம் எங்களை மன்னிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நான் தெய்வீகத்தின் ஒரு வடிவமாக கருதும் பொதுமக்களிடமும் இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். மேலும் மகா கும்பமேளா நிகழ்வை மிக சிறப்பாக செய்து முடித்ததற்காக உத்திர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.