பொதுவாக உலக அளவில் பயன்படுத்தப்படும் கீரை விதைகளில் முதன்மையானது கொத்தமல்லி விதை. கொத்தமல்லி விதையை நாம் மசாலா பொருளாக பயன்படுத்தி வருகிறோம். இதன் ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.பித்தத்தால் ஏற்படும் தலைவலி மற்றும் வாந்தி நீங்க சிறிதளவு கொத்தமல்லி விதையுடன் இஞ்சி, காய்ந்த திராட்சை பழம், சிறிதளவு வெல்லம் சேர்த்து அவித்து குடித்தால் தலைவலி மற்றும் வாந்தி போன்றவை உடனே நீங்கி நம் ஆரோக்கியம் பலம் பெரும்
2.மேலும் சுக்குடன் மல்லி சேர்த்து அரைத்து காபி தூளாகவும் பயன்படுத்தி ஆரோக்கியமான காபி குடிக்கலாம்
3.அஜீரணம், வயிற்று உப்புசம், வயிற்றுப் பொருமல், வயிற்றுப் புண் மற்றும் உணவு விரைவில் செரிமானமாக கொத்தமல்லி இலையை ரசம் மற்றும் துவையல் செய்து சாப்பிட வேண்டும்.
4.கொத்தமல்லி இலை கொழுப்பை உடைத்து கரைக்க உதவுவதால் உடல் பருமன் குறைகிறது.
5.காய்ச்சல் உள்ளவர்களுக்கு கொத்தமல்லி இலையை சேர்த்து ரசம் செய்து கொடுக்க உடலுக்கு புது தெம்பை அளிக்கும்.
6.கொத்தமல்லி இலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
7.கொத்தமல்லி இலை சுவாசப் பாதையில் தங்கியுள்ள நோய்க்கிருமிகளை அழித்து சளியை வெளியேற்றி நம் ஆரோக்கியம் காக்கும் .