தைராய்டு பிரச்சினையால் இவ்ளோ பாதிப்பா ?
Top Tamil News March 13, 2025 09:48 AM

பொதுவாக பெரும்பாலான பெண்கள் ஹைப்போ தைராய்டினால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் உடல் எடை அதிகரிப்பு, ஒழுங்கற்ற மாதவிடாய் நிலை போன்றவை ஏற்படுகிறது. . தைராய்டு உள்ள பெண்கள் தாய்மையடையும் பல வழிகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன
1.பெண்கள் தாய்மை அடைவதற்கு முயற்சிக்கும் முன் தைராய்டு பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்
 2.சில பெண்களுக்கு தைராய்டு ஹார்மோன் குறைவாக சுரப்பின் மருந்துகள் மற்றும் மாத்திரைகள் மூலம் TSH,T3,T4 ஹார்மோன்களின் சமநிலை பாதுகாக்கபட்டு பின்னர் கருத்தரிக்க முடியும்  


3. பெண்கள் எளிதில் கர்ப்பம் அடைய அடிக்கடி பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
4.கர்ப்பிணி வயிற்றில் வளரும் குழந்தையின் முக்கிய பாகங்கள் முதல் மூன்று மாத காலத்தில் உற்பத்தியாகி வளர்ச்சி அடைகிறது.
5.குழந்தையின் மூளை, நரம்பு மண்டலம் உற்பத்தியாக மற்றும் வளர்ச்சியடைய தாயிடமிருந்து முதல் மூன்று மாத காலத்தில் உற்பத்தியாகி குழந்தைக்குச் செல்லும் தைராய்டு ஹார்மோன் மிக அவசியம்.
6.தாய்க்கு தைராய்டு பிரச்சினை இருக்கும் பட்சத்தில் அது கண்டறியப்படாமல் சிகிச்சை அளிக்கப்படாமல் இருந்தால் குழந்தை வளர்ச்சியை பாதிக்கும். கருச்சிதைவு ஏற்படும் அபாயம் அதிக அளவில் உள்ளது

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.