பிரண்டையை துவையல் செய்து சாப்பிட எந்த நோய் குணமாகும் தெரியுமா ?
Top Tamil News March 13, 2025 09:48 AM

பொதுவாக  அல்சருக்கு நிறைய மருந்து மாத்திரை இருந்தாலும் சில இயற்கை வழிகளை பின்பற்றினால் அந்த நோயிலிருந்து நிவாரணம் பெறலாம்
கீழ்கண்ட உணவு முறைகள் மூலம் வயிற்றுப்புண்ணிலிருந்து மிக விரைவில் நிரந்தரமான குணம் பெறலாம்.
தவிர்க்கவேண்டியவை

1.அதிக காரத்தன்மை உள்ள உணவுகளை தவிர்த்து விடவேண்டும்.
2.பசி அதிகமாக இருக்கும் போதோ அல்லது பசிக்கும் போதோ  சூப் போன்றவற்றை பருகக் கூடாது. இது அமில சுரப்பை அதிகப்படுத்தும்.
3.புகை பிடித்தல் மது பழக்கம் போன்றவற்றை கைவிடவேண்டும்.
4.காலையில் வேக வைத்த இடியாப்பம், இட்லி, புட்டு போன்றவற்றுடன் தேங்காய் பால், தேங்காய் துருவல், தேங்காய் சட்னி ஆகியவற்றை  சேர்த்துக்கொள்ளலாம்


5.. காலை உணவுடன் அல்லது தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வரலாம். வாழைப்பழம் வயிற்றுப் புண்களை குணமாக்கும்.
6.மதியம் மோர் கலந்த சாதத்தை சாப்பிட வேண்டும். மோர் புண்களை ஆற்றும், வயிற்று எரிச்சல் போன்றவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கும் ..
7. கொதிக்கும் நீரில் சிறிதளவு சீரகம் சேர்த்து மூடி வைத்து ஆறியபின் பருகலாம் இதனால் ஜீரண கோளாறுகள் குறையும். .
8.பிரண்டை வயிற்று புண்களை குணப்படுத்தும். அதனால் பிரண்டையை துவையல் செய்தோ அல்லது சட்னி போன்றோ  உணவோடு சேர்த்துக் கொள்ளலாம்.
9.மன அழுத்தம் இல்லாமல் வாழ்வது, இரவில் நல்ல தூக்கம் மற்றும் போதுமான அளவு ஓய்வு  போன்றவற்றை பின்பற்றுவதன் மூலம் வயிற்றுப்புண் அல்லது குடல் புண்ணிலிருந்து மிக விரைவில் முழுமையாக குணமடையலாம்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.