இனி சென்னையில் பார்க்கிங் இடம் இருந்தால் தான் கார் வாங்க முடியும்... சென்னை மாநகராட்சி அதிரடி !
Dinamaalai March 13, 2025 10:48 PM

சென்னை மாநகராட்சி இடநெருக்கடி , சாலையில் கார் பார்க்கிங் இவைகளை ஒழுங்குபடுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில்  சென்னையில் புதிதாக கார் வாங்குபவர்கள் அதனைப் பதிவு செய்ய வேண்டுமெனில்  தனது வீட்டிலோ அல்லது தனியார் இடத்திலோ காரை நிறுத்துவதற்கான இடம் உள்ளது என்பதற்கு, ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும் என மாநகராட்சி அறிவித்துள்ளது. 

அதாவது சென்னையில் கார் வாங்குபவர்கள்,  பார்க்கிங் இடம் இருப்பதற்கான சான்று இணைப்பதை கட்டாயமாக்கும் வகையில் சென்னை பெருநகர போக்குவரத்து ஆணையம் அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. 

மேலும் ஏற்கனவே கார்கள் வைத்திருந்து, கார் பார்க்கிங் இடம் இல்லாதவர்களுக்கு, நகரின் திட்டமிடப்பட்ட பகுதிகளில் உருவாக்கப்பட்ட இடங்களுடன் குடியிருப்பு பார்க்கிங் அனுமதிகளை உருவாக்க CUMTA பரிந்துரைத்துள்ளது. சென்னையின் ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையத்தின் புதிய கொள்கையை, ஏற்றது தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை. விரைவில் இந்தக் கொள்கை அமலாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.