#featured_image %name%
||श्री:||
ஸ்ரீ ராமஜெயம்
பஞ்சாங்கம் | 26.3.2025 | புதன்கிழமை
!!ஸ்ரீ:!!
!!ஸ்ரீராமஜயம்!!
श्री:श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பங்குனி ~ 12 { 26.3.2025 } புதன் கிழமை**
வருடம் ~ க்ரோதி வருடம் {க்ரோதி நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ சிசிர ருது.
மாதம் ~ பங்குனி மாதம் { மீன மாஸம்}
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ இரவு 11.01 pm வரை த்வாதசி பின் த்ரயோதசி
நாள் ~ புதன் கிழமை {சௌம்ய வாஸரம்}
நக்ஷத்திரம் ~ இரவு 11.59 pm வரை அவிட்டம் பின் சதயம்
யோகம் ~ ஸித்தம்
கரணம் ~ கௌளவம்
அமிர்தாதியோகம் ~ அசுபயோகம்…
நல்லநேரம் ~ காலை 9.00 ~ 10.00 & மாலை 2.00 ~ 3.00.
ராகுகாலம் ~ மதியம் 12.00 ~ 1.30.
எமகண்டம் ~ காலை 7.30 ~ 9.00.
குளிகை ~ காலை 10.30 ~ மதியம் 12.00.
நல்ல நேரம் ~ 9.00to 10.30am and 2.00to3.00pm
சூரியஉதயம் ~ காலை 6.18
சந்திராஷ்டமம் ~ 12.20 pm வரை மிதுனம் பின் கடகம்
சூலம் ~ வடக்கு.
பரிகாரம் ~ பால்.
ஸ்ராத்ததிதி ~ த்வாதசி
இன்று ~
!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः।
सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
ஹோரை புதன்கிழமை
காலை
6-7.புதன். சுபம்
7-8.சந்திரன்.சுபம்
8-9. சனி.. அசுபம்
9-10.குரு. சுபம்
10-11. செவ்வா.அசுபம்
11-12. சூரியன்.அசுபம்
பிற்பகல்
12-1. சுக்கிரன்.சுபம்
1-2. புதன். சுபம்
2-3. சந்திரன்.சுபம்
மாலை
3-4. சனி..அசுபம்
4-5. குரு. சுபம்
5-6. செவ்வா.அசுபம்
6-7. சூரியன். அசுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.
இன்றைய (26-3-2025) ராசிபலன்கள்
மேஷம்மேஷ ராசிக்கான பலன்கள்
ஆரோக்கியம் சீராக இருக்கும். புத்தி சாதுரியத்தால் சில தடைகளை வெற்றி கொள்வீர்கள். கணவன், மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். பெற்றோர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். திட்டமிட்ட செயலை மாற்றியமைப்பீர்கள். தொழில் ரீதியாக எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். ஆகாரத்தில் கட்டுப்பாடு வேண்டும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள் நிறம்
அஸ்வினி : வெற்றிகரமான நாள்.
பரணி : விருப்பங்கள் நிறைவேறும்.
கிருத்திகை : கட்டுப்பாடு வேண்டும்.
ரிஷப ராசிக்கான பலன்கள்
வேலையாட்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பொருளாதார விஷயங்களில் ஏற்ற, இறக்கமான சூழல் காணப்படும். பழக்க வழக்கங்களில் சிறுசிறு மாற்றங்கள் உருவாகும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். மாணவர்களின் முயற்சிகளுக்கு சாதகமான பலன் கிடைக்கும். மனதில் இருந்து வந்த குழப்பம் நீங்கும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்
கிருத்திகை : ஒத்துழைப்பான நாள்.
ரோகிணி : மாற்றம் பிறக்கும்.
மிருகசீரிஷம் : குழப்பம் நீங்கும்.
மிதுன ராசிக்கான பலன்கள்
வியாபார பணிகளில் பொறுமையை கையாளவும். தனவரவுகள் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களால் ஆதாயம் ஏற்படும். நீண்ட நேரம் கண் விழிப்பதை குறைத்துக்கொள்ளவும். புதிய முயற்சிகளை செயல்படுத்துவதில் கவனம் வேண்டும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப சிந்தித்துச் செயல்படவும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மிருகசீரிஷம் : பொறுமை வேண்டும்.
திருவாதிரை : ஆதாயகரமான நாள்.
புனர்பூசம் : சிந்தித்துச் செயல்படவும்.
கடக ராசிக்கான பலன்கள்
குடும்பத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. நண்பர்கள் வகையில் சிறு வேறுபாடுகள் ஏற்படும். பயனற்ற சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். வீண்செலவுகளால் மனச்சஞ்சலம் ஏற்படும். செய்யும் முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். இணைய வர்த்தக பணிகளில் கவனத்துடன் செயல்படவும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
புனர்பூசம் : வாதங்களை தவிர்க்கவும்.
பூசம் : சஞ்சலமான நாள்.
ஆயில்யம் : கவனம் வேண்டும்.
சிம்ம ராசிக்கான பலன்கள்
உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் சாதகமாகும். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் அறிமுகம் மேம்படும். காரிய அனுகூலம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுடன் மனம் விட்டு பேசவும். மற்றவருக்கு உதவுவது திருப்தியை தரும். பணிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்
மகம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
பூரம் : அறிமுகம் மேம்படும்.
உத்திரம் : திருப்தியான நாள்.
கன்னி ராசிக்கான பலன்கள்
காப்பீடு துறைகளில் ஆதாயம் மேம்படும். தடைப்பட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். பணி தொடர்பாக வெளியூர் பயணங்கள் கைகூடும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல்கள் மேம்படும். வியாபார பணிகளில் இருந்து வந்த தடைகள் விலகும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். புகழ் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்
உத்திரம் : ஆதாயம் மேம்படும்.
அஸ்தம் : பயணங்கள் கைகூடும்.
சித்திரை : தடைகள் விலகும்.
துலாம் ராசிக்கான பலன்கள்
குழந்தைகளிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வரவுகள் மேம்படுத்துவது தொடர்பான எண்ணம் மேம்படும். மாணவர்களுக்கு பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். சிந்தனை திறனில் மாற்றங்கள் ஏற்படும். உத்தியோக பணிகளில் துரிதம் உண்டாகும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்
சித்திரை : வேறுபாடுகள் குறையும்.
சுவாதி : ஆர்வம் அதிகரிக்கும்.
விசாகம் : துரிதம் உண்டாகும்.
விருச்சிக ராசிக்கான பலன்கள்
மனதளவில் உற்சாகம் உண்டாகும். சிந்தனைகளில் தெளிவுகள் ஏற்படும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பயணம் மூலம் ஆதாயம் அடைவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். விவசாய பணிகளில் அரசு உதவிகள் கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்பச்சை நிறம்
விசாகம் : உற்சாகமான நாள்.
அனுஷம் : ஆரோக்கியம் மேம்படும்.
கேட்டை : மாற்றமான நாள்.
தனுசு ராசிக்கான பலன்கள்
மறைமுக எதிர்ப்புகளை புரிந்து கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். பணிகளில் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். தொழில்நுட்பம் சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். நினைத்த எண்ணங்களை செயல் வடிவில் மாற்றுவீர்கள். வியாபாரத்தில் சில நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்
மூலம் : ஆதரவான நாள்.
பூராடம் : தேடல்கள் அதிகரிக்கும்.
உத்திராடம் : நுட்பங்களை அறிவீர்கள்.
மகர ராசிக்கான பலன்கள்
நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும். எதிர்க்கருத்து கூறியவர்கள் மனம் மாறுவார்கள். கூட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும். குடும்ப பிரச்சனைகள் விலகும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். புதியவர்கள் நட்பால் நன்மை ஏற்படும். அலுவலகத்தில் முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் வரவுகள் மேம்படும். பகை விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : தேவைகள் பூர்த்தியாகும்.
திருவோணம் : பிரச்சனைகள் விலகும்.
அவிட்டம் : வரவுகள் மேம்படும்.
கும்ப ராசிக்கான பலன்கள்
கலை பணிகளில் ஆர்வம் உண்டாகும். சமூகம் பற்றிய புதிய கண்ணோட்டம் பிறக்கும். மனம் விட்டு பேசுவதால் அமைதி உண்டாகும். எதிலும் சற்று சிந்தித்து நிதானமாக செயல்படவும். உத்தியோக மாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். தொழில் நுட்ப தேடல் உண்டாகும். கனிவான பேச்சுக்கள் நன்மதிப்பை உருவாக்கி தரும். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்
அவிட்டம் : ஆர்வம் ஏற்படும்.
சதயம் : அமைதி கிடைக்கும்.
பூரட்டாதி : தேடல் உண்டாகும்.
மீன ராசிக்கான பலன்கள்
விலகிச் சென்றவர்கள் பற்றிய எண்ணம் மேம்படும். சுதந்திர மனப்பான்மை அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் மாற்றங்கள் பிறக்கும். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புதிய செயல்களில் சிந்தித்து செயல்படவும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
பூரட்டாதி : சுதந்திரம் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : மாற்றங்கள் பிறக்கும்.
ரேவதி : சிந்தித்துச் செயல்படவும்.
தினம் ஒரு திருக்குறள்
அதிகாரம்: அருளுடைமை குறள் எண்: 246
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்.
மு.வ உரை:
அருள் இல்லாதவராய் அறமல்லாதவைகளைச் செய்து நடப்பவர்களை, உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்பார்.
ராஜா பர்த்ரு ஹரியின் சுபாஷிதம்
மாதா சமம் நாஸ்தி சரீர போஷணம்
சிந்தா சமம் நாஸ்தி சரீர சோஷணம்
பார்யா சமம் நாஸ்தி சரீர தோஷணம்
வித்யா சமம் நாஸ்தி சரீர பூஷணம்
ஒரு மனிதனுக்கு தாயைப் போல் சரீரத்தைப் போஷிக்கச் செய்பவர் யாருமில்லை
கவலையைப் போல் சரீரத்தை துன்புறுத்துவது எதுவுமில்லை.
மனைவியைப் போல் சரீரத்தை சுகப்படுத்துபவர் எவருமில்லை.
கல்வியைப் போல் சரீரத்தை அலங்கரிக்கும் பூஷணம் எதுவுமில்லை.
தினசரி. காம்
தினம் ஒரு திருமுறைமறை – 1. பதிகம் – 44 பாடல் – 7
பொங்கிளநாகமொ ரேகவடத்தோ டாமைவெண் ணூல்புனைகொன்றை
கொங்கிளமாலை புனைந்தழகாய குழகர்கொ லாமிவரென்ன
அங்கிளமங்கையோர் பங்கினர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
சங்கொளிவண்ணரோ தாழ்குழல்வாடச் சதிர்செய்வதோ விவர்சார்வே.
விளக்கவுரை :
சினம் பொங்கும் இளநாகத்தைப் பூண்டு, ஒற்றையாடை அணிந்து, ஆமை ஓட்டையும், வெண்மையான பூணூலையும் அணிந்து, தேன்நிறைந்த புதிய கொன்றை மலர்மாலை அணிந்த அழகிய இளைஞர் இவர் என்று சொல்லும்படி இளநங்கையான உமையம்மையை ஒருபாகமாக உடைய திருப்பாச்சிலாச்சிராமத்து உறையும் சங்கொளி போல நீறு அணிந்த திருமேனியை உடைய இறைவரோ இத்தாழ்குழலாள் வருந்தச் சாமர்த்தியமான செயல் செய்வது. இது இவர் பெருமைக்குப் பொருத்தப்படுவதோ?
News First Appeared in