நிர்மலா சீதாராமனுக்கு வைகோ எச்சரிக்கை... தமிழ்நாட்டில் கால் வை, அப்புறம் பார்க்கிறேன்... !
Dinamaalai April 05, 2025 06:48 PM

இந்தியாவில் மாநிலங்களவையில் வக்பு திருத்த சட்ட மசோதா குறித்த விவாதம் மற்றும் மீனவர்கள் பிரச்சினைகள் பற்றி விவாதம் நடைபெற்றது. அந்த வகையில்  மீனவர்கள் பிரச்சினைகள் குறித்து பேசிய மதிமுக  பொதுச்செயலாளர் வைகோவுக்கும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இடையே நடந்த காரசாரமான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது, வைகோ “தமிழ்நாட்டில் கால் வை பார்க்கிறேன்” என எச்சரிக்கை விடுத்திருந்தார். 

டென்ஷனான நிர்மலா சீதாராமன் உடனடியாக அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசினார்.  அதன்படி நிர்மலா சீதாராமன்  “அப்படி பேசுவது தவறு. யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் செல்லும் உரிமை உள்ளது. நாங்கள் எங்கு வேண்டுமானாலும் செல்வோம், உங்களால் என்ன செய்ய முடியும்? இந்தியா ஒரு ஒருங்கிணைந்த நாடு என்பதை வலியுறுத்திய அவர், எந்த ஒரு மாநிலத்திற்கும் யாரும் செல்ல முடியாது என்று கூறுவது ஜனநாயகத்திற்கும், சபையின் மரியாதைக்கும் எதிரானது.

வைகோ எப்போதும் உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவார். இந்த முறை அவர் பேசியதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. வைகோ பேசியதை அவைகுறிப்பில் இருந்து நீக்க வேண்டும்” எனவும் நிர்மலா சீதாராமன் வேண்டுகோள் விடுத்தார். அதனை தொடர்ந்து வைகோவின் பேச்சு அவைகுறிப்பில் இருந்து நீக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.