மக்களுக்கு ஜிப்லி புகைப்படங்கள் மீது ஈர்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் புகைப்படங்களை ஜிப்லியாக மாற்றும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என நெல்லை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
AI தளங்களில் பதிவேற்றப்படும் புகைப்படங்களை சம்பந்தப்பட்டவரின் அனுமதி இல்லாமல் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. நம்பகமான AI தளங்களை மட்டுமே பயன்படுத்தி புகைப்படங்களை ஜிப்லியாக மாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.