வாணியம்பாடி அருகே கிரேன் இயந்திரத்தில் பெல்ட் அறுந்து விழுந்ததில் கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கோணாமேடு புத்தர் நகர பகுதியை சேர்ந்தவர் சுமை தூக்கம் தொழிலை ஜெய்சங்கர். இவர் இன்று காலை வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் பாரத் இன்ஜினியரிங் ஒர்க்ஸ் தொழிற்சாலையில் தோல் பதனிடும் இயந்திரத்தை லாரியில் ஏற்ற முயன்ற போது ராட்சத கிரேன் பெல்ட் அறுந்து விழுந்ததால் சுமை தூக்கும் தொழிலாளி ஜெய்சங்கர் (55) இயந்திர இடுபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கிராமிய போலீஸார் பிரேதத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ராட்சத கிரேன் பெல்ட் அறுந்த்தால் இயந்திர இடுப்பாட்டில் சிக்கி சுமை தூக்கும் தொழிலாளி ஜெய்சங்கர் (55) பலியாகும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.