உத்தரப்பிரதேசம் மாநிலம் தியோரியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார் சிங். இவர் மதன்பூர் காவல் நிலைய பொறுப்பாளராக வேலை பார்த்து வருகிறார். வினோத்குமார் அந்த பகுதி மக்களுக்கு நல்லது செய்து வந்தார்.
தற்போது வினோத்குமாருக்கு பணியிட மாற்றத்திற்கான உத்தரவு வந்தது. இந்த நிலையில் ஊர் மக்கள் ஒன்று திரண்டு மேளதாளங்கள் முழங்க, குதிரை சவாரி ஊர்வலத்துடன் வினோத்குமாருக்கு பிரியாவிடை அளித்தனர்.
வினோத்குமார் உள்ளூர் மக்களுக்காக பல நல்ல விஷயங்களை செய்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சரித்திர பதிவேடு குற்றவாளிகளை ஒன்றாக கூட்டி அணிவகுப்பு நடத்தினார். இதனால் குற்றவாளிகள் பயத்தில் இருந்தனர். பல ஏழை பெண்களின் திருமணத்திற்கு வினோத்குமார் உதவி செய்துள்ளார்.
சிறுநீரக கோளாறு பாதிக்கப்பட்ட ஒருவரது மகளுக்கு தேவையான உதவிகளை செய்து திருமணத்தை நடத்தி வைத்தார். அவரது பணியிட மாற்றம் உள்ளூர் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.