கேரள மாநிலம் கொச்சி மட்டன்சேரி பகுதியில் 28 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவரது வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு லிங்க் வந்தது. அதனை கிளிக் செய்து பார்த்த போது குறிப்பிட்ட பணம் முதலீடு செய்தால் இருமடங்காக லாபம் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை நம்பி அந்த வாலிபர் பல்வேறு தவணைகளாக 46 லட்சம் ரூபாய் வரை பணத்தை முதலீடு செய்தார். ஆனால் அந்த பணம் திரும்பி வரவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த வாலிபர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் எர்ணாகுளத்தைச் சேர்ந்த தேவ் (28), கண்ணூரைச் சேர்ந்த முகமது ராபி (27) ஆகிய இருவரும் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதில் தேவ் மலையாள சினிமாவில் இணை இயக்குனராக வேலை பார்ப்பது குறிப்பிடத்தக்கதாகும். முகமது ரபி மேக்கப் மேனாக வேலை பார்த்து வருகிறார். இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.