திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி அருகே ஒரு தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த நிலையில் ராட்சத எந்திரத்தை கிரேன் மூலம் தொழிற்சாலை உள்ளே வைக்க முயன்றனர். அப்போது கிரேன் எந்திரத்தின் பெல்ட் எதிர்பாராதவிதமாக அறுந்து விழுந்தது.
இதனால் கூலி தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தொழிலாளியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.