டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியை அதிரடியான பேட்டிங் மூலம் வென்றுள்ளது குஜராத் டைடன்ஸ்.
இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது.
டெல்லிக்கு எதிரான போட்டியில் ஓப்பனிங் இறங்கிய சும்பன் கில் எதிர்பாராத விதமாக கருண் நாயரின் டைரக்ட் ஹிட்டில் ரன் அவுட் ஆனார்.
ஆனால், ஜோஸ் பட்லர் மற்றும் ரதர்ஃபோர்டின் அதிரடி ஆட்டத்தால் வெற்றிபெற்றது குஜராத் டைடன்ஸ் அணி.
ஏமாற்றமான ரன் அவுட்வெற்றி குறித்து பேசிய கில், "ஒரு கட்டத்தில் 220-230 ரன்கள் வருமோ எனத் தோன்றியது. அதை நல்லவேளையாக குறைத்தோம். பௌலர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.
முதல் போட்டியில் நாங்கள் 245 ரன்களை சேஸ் செய்தபோதும் சரியாகப் போட்டியில் இருந்தோம். வெறும் 10 ரன்கள் வித்தியாசத்தில்தான் தோற்றோம். நாங்கள் நன்றாக சேஸ் செய்கிறோம். நன்றாக டெஃபண்டும் செய்கிறோம்" என்றார்.
மேலும் தனது ரன் அவுட் குறித்து பேசும்போது, "அது மிகவும் ஏமாற்றமாக இருந்தது. ஆனால் நமக்கு இன்னும் நிறைய போட்டிகள் இருக்கிறது. நிச்சயமாக எனக்கான வாய்ப்பு கிடைக்கும்" என்றார்.
"வெறும் பயங்கரமான அடி அல்ல"அதிரடியான பேட்ஸ்மேன்கள் குறித்து பேசும்போது, "பட்லரும் ரதர்ஃபோர்டும் ஸ்ட்ரைக் ரொடேட் செய்த விதம் அருமையாக இருந்தது. ஹிட்களும் சிறப்பு.
இதுவெறும் பயங்கரமான அடி அல்ல, நேர்த்தியாக விளையாடிய பேட்டிங், இதைப் பார்ப்பதுதான் விருந்தாக அமையும். இந்த வெற்றி மிகவும் மகிழ்ச்சியானது" எனக் கூறியுள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...