ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் சத்யநாராயணசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று காலை ஒரு ஜோடிக்கு திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்த திருமணத்திற்கு இரு வீட்டை சேர்ந்த நெருங்கிய உறவினர்கள் மட்டுமே வந்தனர்.
இந்த நிலையில் மணமேடைக்கு வந்த சிறிது நேரத்திலேயே மணப்பெண் கதறி அழுதார். இதனை பார்த்து சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்திய போது மணப்பெண் எனக்கு 20 வயது தான் ஆகிறது.
ஆனால் என்னை விட 22 வயது அதிகம் உள்ளவருடன் எனது பெற்றோர் திருமணம் செய்து வைக்கின்றனர். ஆரம்பத்திலேயே இந்த திருமணம் பிடிக்கவில்லை என கூறினேன். ஆனால் கட்டாயப்படுத்தி மணமேடைக்கு அழைத்து வந்துள்ளனர் என கூறியுள்ளார்.
இதனால் போலீசார் இருவீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி பெண்ணுக்கு விருப்பமில்லாமல் திருமணத்தை நடத்தக்கூடாது என எச்சரித்தனர். அதன் பிறகு இரு வீட்டாரிடமும் போலீசார் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.