இந்தியா- பங்களாதேஷ் எல்லையில் உள்ள ஒரு நதிக்கரையில் அமர்ந்திருந்த பி.எஸ்.எப் வீரரிடம் ஒரு குழுவினர் தகாத முறையில் நடந்து கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், பி.எஸ்.எப் வீரர் ஒருவர் ஆற்றின் ஒரு கரையில் அமைதியாக அமர்ந்திருந்தார். அதனை கவனித்த எதிர் பக்கம் இருந்த ஒரு குழுவினர் வீரரை தகாத முறையில் திட்டியுள்ளனர்.
அந்த குழுவில் ஒருவர் கல்லை எடுத்து ஆற்றின் மறுபக்கம் அமர்ந்திருந்த வீரரை நோக்கி எறிந்தார்.இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சமூக ஆர்வலர்கள் பலரும் மத்திய அரசை விமர்சித்தும், பாதுகாப்பு துறையின் செயலற்ற தன்மையும் குற்றச்சாட்டியுள்ளனர். இதுபோன்ற செயல்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.