சம்பளத்துல ஒரு ரூபாய் குறைந்தால் கூட சண்டைதான்… ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூரம்… அதிர்ச்சி சம்பவம்…!!!
SeithiSolai Tamil April 21, 2025 08:48 AM

மகாராஷ்டிரா மாநிலம் பிரம்மபுரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாதவபுரம் பகுதியில் நடைபெற்ற கொடூரமான கணவன்-மனைவி இடையிலான குடும்பக் கலவரம் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோஹித் என்ற 30 வயது இளைஞர் தனது மனைவி சலோனியை கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, தானாகவே காவல் நிலையம் சென்று குற்றத்தை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

காவல்துறையினர் முதலில் அவர் சொல்வதைக் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் தொடர்ந்து கூறியதையடுத்து, போலீசார் அவர் வீட்டுக்கு சென்று விசாரித்தபோது சலோனி இறந்த நிலையில் கிடந்தார்.

மோஹித் தனது வாக்குமூலத்தில், மனைவி சலோனி முழு சம்பளத்தையும் பிடுங்கிக் கொள்வார், ஒரு ரூபாய் குறைவாக இருந்தாலும் சண்டை போடுவார் என கூறியுள்ளார். மேலும், தனது மாமியார் அவரை அடிக்கடி கேலி செய்வதோடு, காதல் திருமணம் செய்ததற்காக உறவினர்களிடமிருந்தும் அவமானம் அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

குடும்பத்தில் தொடர்ந்த சண்டைகள், அவமானங்கள் காரணமாக மனஅழுத்தத்திற்கு ஆளானதாகவும், இதனால் தான் தனது மனைவியை கொன்றதாகவும் மோஹித் கூறியுள்ளார். அவரது பெற்றோரும் இந்த நிலையை ஏற்றுக்கொள்ள முடியாமல் வேறு இடத்திற்கு குடிபோயிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து எஸ்பி நகர உயர் அதிகாரியான ஆயுஷ் விக்ரம் சிங் கூறுகையில், “கணவன் தனது மனைவியை கொலை செய்ததாக தானே வந்து ஒப்புக்கொண்டார். சம்பவ இடத்தில் மனைவியின் உடல் மீட்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் வீட்டு உரிமையாளர் மற்றும் சாட்சிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குற்றத்திற்கான முழுமையான காரணங்களை அறிந்து சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என தெரிவித்தார். தற்போது மோஹித் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். இந்த கொடூர குடும்பக் கலவரம் சமூகத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.