உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் பகுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் சமூக வலைதளங்களை கடந்த சில நாட்களாக குலுக்கி வருகிறது. 40 வயதான அனிதா தேவி என்பவர், தனது மகள் சிவானிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட 25 வயது ராகுல் சிங்கை காதலித்து, திருமணத்திற்கு சில நாட்கள் முன்பே அவருடன் ஓடி சென்ற சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 16ஆம் தேதி திருமணம் நடக்க இருந்த நிலையில் ஏப்ரல் 8ஆம் தேதியே இருவரும் வீட்டிலிருந்து தப்பி ஓடினர்.
இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டபோது காரில் இருந்தபடி பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் பரவலாகி வருகிறது. அதில், பதற்றமாக இருக்கிறார் அனிதா தேவி. நிருபர்களிடம் “உங்க மொபைலை உடைத்துருவேன்” என்று எச்சரிக்கையும் விடுத்தார். அதேசமயம், “திருமணம் கோவில்லா கோர்ட்ட்லா?” என்ற கேள்விக்கு ராகுல் தடுமாறிக்கொண்டு “கோர்ட்… கோர்ட்…” என பதிலளித்தார். ஆனால் அனிதாவுக்கு சட்டபூர்வமான விவாகரத்து நடைபெறாத காரணத்தால் இருவருக்கும் திருமணம் செல்லாது என ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டினர்.
போலீசாரின் தகவலின்படி, இருவரும் தப்பியோடும்போது தங்க நகைகள் மற்றும் பணத்தையும் எடுத்துச் சென்றுள்ளனர். நேபாளம் வழியாக நாட்டை விட்டு வெளியேற திட்டமிட்டிருந்த நிலையில், அதற்கு முன்பாகவே போலீசாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர். ஆனால் அனிதா தேவி, “தப்பிச் செல்லவில்லை, மீடியாவில் வந்த தவறான செய்திகளை பார்த்து நாங்கள் தானாகவே திரும்ப வந்தோம்” என்றும், “நான் ராகுலுடன் வாழவேண்டும் என்ற விருப்பம்தான் உள்ளது” என்றும் வாதிடுகிறார்.
இந்நிலையில், அனிதாவின் கணவர் ஜிதேந்திர குமார் போலீசில் மிஸ்ஸிங் புகார் அளித்ததன் மூலம் விஷயம் வெளியானது. “என் மனைவி மகளுக்காக பார்த்த மணமகனோடு ஓடிப்போனது குடும்பமே தூக்கி வீசப்பட்டதுபோல் உள்ளது. இது நம்பமுடியாத துரோகமும், குடும்ப மரியாதைக்கு நேர்ந்த பயங்கர தாக்குதலும்” என்று வேதனையுடன் கூறியுள்ளார். திருமண ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் இந்த சம்பவம் குடும்பத்தையே சீர்குலைத்துள்ளது.
சமூக வலைதளங்களில் இந்த விசித்திரமான காதல் கதையைக் கொண்டு கேலிச் சொற்கள் மற்றும் சீரியல் ஃபார்மேட் கலாட்டாக பரவி வருகிறது. “இது நெட்பிளிக்ஸ் தொடருக்கு கதையா இருக்கு”, “அன்ட்டிக்கு ஒரு மிட்-லைஃப் கிரைசிஸா?” என பலரும் கலாய்த்து வருகிறார்கள். சட்ட ரீதியாகவும், காதல் ரீதியாகவும் இவர்கள் எதிர்கொள்ளும் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாயுள்ளது.