Ajith: அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் மாபெரும் வெற்றியை அடைந்ததை ஒட்டி அஜித்தின் அடுத்த பட டைரக்டர் யார் என்ற விவாதம் தான் கோடம்பாக்கத்தில் நடந்து கொண்டிருக்கின்றது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்த திரைப்படம் தான் குட் பேட் அக்லி .அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் அஜித்தை இந்த படத்தில் மிக மாசாக காட்டியிருக்கிறார்.
படமும் நினைத்ததை விட அதிகமான வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற ஒரு கேள்வி அனைவர் மத்தியில் இருந்து வருகிறது. அந்த லிஸ்டில் வரிசையாக பல இயக்குனர்கள் இருக்கிறார்கள் .விஷ்ணுவர்தன் ,ஆதிக் ரவிச்சந்திரன், சிறுத்தை சிவா மற்றும் தனுஷ் ஆகியோர் அஜித்தின் படத்தை இயக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையில் அஜித்துக்காக தனுஷ் ஒரு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி வைத்திருப்பதாகவும் அதன் ஒன்லைனை அஜித்திடம் சொல்லி இருப்பதாகவும் கார் ரேசை முடித்துவிட்டு சென்னை திரும்பும் போது அஜித் மீதி கதையை கேட்பதாகவும் ஒரு தகவல் இருந்தது. அதனால் அஜித் தனுஷ் சந்திப்பு இந்த மாதம் இறுதியில் நடக்க இருப்பதாகவும் சொல்லப்பட்டது .ஆனால் தனுஷ் ஏற்கனவே இட்லி கடை படத்தை இயக்கி வருகிறார்.
அந்த படத்தின் ஒரு பாடல் காட்சி மட்டும் படமாக்க வேண்டி இருக்கிறதாம். அதை பாங்காங்கில் படமாக்க இருக்கிறார்கள். அதற்காக சத்யராஜ், அருண் விஜய் ,பார்த்திபன் போன்றோர் பாங்காங் சென்ற புகைப்படம் வெளியானது. இந்த பாடல் காட்சி எல்லா நடிகர்களும் இருக்கும் மாதிரியான ஒரு பாடல் கட்சியாம். கிட்டத்தட்ட 11 நாட்கள் இந்த பாடலை படமாக்க வேண்டி இருக்கிறதாம்.
அதனால் தனுஷ் பாங்காங்கில் இருக்கும் பொழுது எப்படி அஜித்துடன் சந்திப்பு நிகழும் என அனைவரும் கேட்டு வருகின்றனர். அதனால் அஜித் ஜூன் மாதம் தனுஷிடம் கதை கேட்பதாக சொல்லி இருக்கிறாராம். இன்னொரு தகவல் என்னவெனில் அஜித்தை அடுத்து இயக்கப் போவது ஆதிக் தான் என நம்பத் தகுந்த சிலர் கூறி வருகிறார்களாம். அதே மைத்ரி மூவிஸ் பேனரில் தான் அஜித் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.