சிகிச்சை பெற்ற 47 வயது பெண்… மருத்துவமனையில் யாரும் எதிர்பாராத சம்பவம்… போலீஸ் விசாரணை…!!
SeithiSolai Tamil April 22, 2025 04:48 AM

சென்னை மாவட்டம் திருவொற்றியூர் பகுதியில் 47 வயது பெண் ஒருவர் வசித்து வந்தார். இவர் அதிகமான மன அழுத்தம் காரணமாக ஆழ்வார்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் நேற்று காலை திடீரென மருத்துவமனையின் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய முயன்றார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த செவிலியர்கள் அந்த பெண்ணை மீட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்படி மருத்துவமனைக்கு விரைந்து சென்ற போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.