மின்சார கட்டணத்தை 52% உயர்த்தி அதிமுக தேர்தல் நேரத்தில் மட்டும் தான் குறைச்சாங்க... செந்தில் பாலாஜி பளிச்!
Dinamaalai April 23, 2025 12:48 AM

தமிழகத்தில் 2025-2026 நிதிநிலை அறிக்கைக்கான கூட்டத்தொடர் இன்று சட்டப்பேரவையில் நடைபெற்றது. இந்நிலையில், மின்சாரம், மரபுசாரா எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு மற்றும் கலால் வரி, ஆயத்தீர்வை துறைகளை சார்ந்த மானிய கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டன.

இதில், மின்துறை சார்ந்த விவாதத்தின் போது, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி  “ அதிமுக ஆட்சியில் 52 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு தேர்தலுக்கு முன்னதாக 4 சதவீதம் குறைக்கப்பட்டது. தற்போதைய திமுக ஆட்சி காலத்தில் மின் கட்டணம் 30 சதவீதம் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. 

கடந்த ஆட்சியில் முடிக்கப்படாமல் இருந்த திட்டங்கள் அனைத்தும் இப்போது விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மீது சுமைகளை ஏற்றாமல் திட்டங்களை செயல்படுத்துவதே அரசின் நோக்கம் என அமைச்சர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.