“கோழைத்தனமான மற்றும் இழிவான வன்முறை செயல்…” ஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்…. தவெக தலைவர் விஜய் கண்டனம்….!!
SeithiSolai Tamil April 23, 2025 05:48 AM

ஜம்மு-காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் 24 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் 13 பேர் காயமடைந்தனர். தீவிரவாதிகள் பஹல்காம் பகுதியில் வைத்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

இதில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணிகள் எனவும், அவர்கள் தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட பலர் கண்டனம் தெரிவித்தனர். மேலும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ஸ்ரீ நகருக்கு சென்று முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கூறியிருப்பதாவது, ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதத் தாக்குதலில், நமது தமிழ்நாட்டு சகோதரர்கள் உட்பட அப்பாவி உயிர்கள் பலியாகின.

இந்த கோழைத்தனமான மற்றும் இழிவான வன்முறைச் செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என கூறியுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.