“மதுகுடிக்க கூடாது என கண்டித்த கணவன்”…. கோபத்தில் ஆணுறுப்பை வெட்டி துடிக்க துடிக்க… கொடூரமாகக் கொன்ற மனைவி… ஆட்டோக்காரர் மூலம் வெளிவந்த உண்மை.!!
SeithiSolai Tamil April 23, 2025 01:48 PM

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பதங்கலிங்கப்பள்ளி பகுதியில் சைலு என்ற 45 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி கவிதா என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் மகளும் இருக்கிறார்கள். இதில் கணவன் மனைவி இருவரும் கடந்த பத்து வருடங்களாக கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இதில் சைலு தன் குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்த நிலையில் கவிதா வேறொரு இடத்தில் தங்கி கூலி வேலைக்கு சென்று வந்தார்.

அபோது அவர் போதை பழக்கத்திற்கு அடிமையானார். தன்னுடைய மனைவி போதைப் பழக்கத்திற்கு அடிமையானதை அறிந்த சைலு அடிக்கடி அவரை கண்டித்துள்ளார். தன்னுடைய கணவன் மது குடிக்க கூடாது என்று கண்டித்தது கவிதாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியதால் அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தார்.

அதன்படி கடந்த 18ஆம் தேதி தன் கணவனுக்கு போன் மூலம் தொடர்பு கொண்ட கவிதா தங்கை வீட்டிற்கு வருமாறு அழைத்தார். அப்போது அங்கு படுத்து சைலு தூங்கிய நிலையில் கவிதா, அவருடைய தங்கை ஜோதி மற்றும் கணவன் மல்லேஷ் ஆகியோர் ஷைலு உடலில் மின்சாரத்தை பாய்ச்சி தாக்கினர்.

பின்னர் ஜோதி அவரின் கால்களை பிடித்துக் கொண்ட நிலையில் கவிதா ஒரு கத்தியை எடுத்து வந்து அவரின் ஆணுறுப்பை அறுத்துவிட்டார். அவரின் ஆணுறுப்பை தனியாக வெட்டியதால் அவர் வலியில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

பின்னர் உடலை ஒரு தார்ப்பாயில் சுற்றி காட்டு பகுதிக்குள் வீச முடிவு செய்து ஆட்டோவில் சென்ற நிலையில் ஆட்டோக்காரர் சந்தேகப்பட்டதால் மீண்டும் உடலை வீட்டிற்கு கொண்டு வந்தனர். பின்னர் அதே பகுதியில் ஒரு கட்டிட கழிவுகளை அவரின் சடலத்தின் மீது போட்டு மூடி விட்டு அங்கு வைத்து விட்டனர்.

இதற்கிடையில் ஆட்டோ ஓட்டுனர் 3 பேர் ஆட்டோவில் ஒரு மர்ம பொருளை வீசுவதற்கு முடிவு செய்து வந்ததாக போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில் அவர்கள் கவிதாவை பிடித்து விசாரணை நடத்தியதில் விவரம் தெரியவர பின்னர் ஷைலு உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து கவிதா உட்பட மூவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.