தாய், மனைவி இருவரையும் வேறோரு ஆண்களோடு தொடர்பு படுத்தி பேசிய தந்தையை கத்தியால் குத்திக் கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார்.
சென்னை புளியந்தோப்பு பேசின் பிரிட்ஜ் டிமலஸ் சாலை கே.பி பார்க் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் பாலு(50). இவரது மனைவி வள்ளி. இவர்களது மகன் கார்த்திக் (29) தனியார் கிளப் ஒன்றில் காசாளராக வேலை பார்த்து வருகிறார். வருக்கு திருமணமாகி அஞ்சலை என்ற மனைவியும் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் கார்த்திக் தந்தை பாலு தினமும் தனது மனைவி வள்ளி மற்றும் மருமகள் அஞ்சலை( அதாவது கார்த்திக் மனைவி) இருவரையும் தகாத வார்த்தையால் திட்டுவது அதுமட்டுமின்றி வேறோரு ஆண்களுடன் தொடர்பு படுத்தி பேசுவது உள்ளி செய்கையில் ஈடுபட்டு வந்துள்ளார்..
இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் இவ்வாறு பேச கூடாது என தந்தையை கண்டி வந்ததால் தந்தை மகன் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதேபோல் நேற்று பாலு வழக்கம் போல் மனைவி மற்றும் மருமகளை தவறாக பேசியதால் ஆத்திரமடைந்த மகன் கார்த்திக் அவருடன் சண்டையிட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியதால் கார்த்திக் வீட்டில் இருந்து காய்கறி வெட்டு கத்தியால் தந்தை பாலுவை சரமாரியாக குத்தியதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். உடனே கார்த்திக் அக்கம் பக்கத்தினரிடம் தந்தை பாலு கத்தியால் குத்திக் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறி அவர்கள் உதவியுடன் தந்தையை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு பாலுவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.. அதுமட்டுமின்றி கார்த்திக் மருத்துவர்களிடம் தந்தை தன்னை தானே குத்திக் கொண்டதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் சந்தேகமடைந்த மருத்துவர்கள், இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் பேசின் பிரிட்ஜ் போலீஸார், விரைந்து சென்று பாலு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் போலீசார் கார்த்திக்கை பிடித்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.. தந்தை பாலு தினமும் தாய் , மனைவியை மற்ற ஆண்களுடன் தொடர்பு படுத்தி பேசுவது, அவர்களிடம் வீண் தகராறில் ஈடுபடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்தும் நேற்று வழக்கம் இருவரையும் தவறான பேசியதால் ஆத்திரத்தில் கத்தி எடுத்து முது மற்றும் வயிற்று பகுதியில் குத்தி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து போலீஸார் கார்த்திக் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.