கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் “நான் முதல்வன்” என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன் கீழ் இன்ஜினியரிங் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கு தொழில் துறை பயிற்சி, நிறுவனங்களுடன் இணைந்து திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் தகவல் தொழில்நுட்பம், பசுமை எரிசக்தி ,மொழி சார்ந்த தகவல் தொடர்பு திறன்கள், நிர்வாகம் கணினி பயிற்சி உள்ளிட்ட பல பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் “நான் முதல்வன்” மூலம் பயிற்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த சிவச்சந்திரன் UPSC சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய தரவரிசையில் 23ஆம் இடமும், தமிழ்நாட்டு தரவரிசையில் முதலிடமும் பிடித்து அசத்தியுள்ளார். இதேபோன்று நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மோனிகா அகில இந்திய அளவில் 39 வது இடத்தை பெற்றுள்ளார். நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 134 பேர் பயிற்சி பெற்ற நிலையில் 50 பேர் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ் வழியில் தேர்வு எழுதிய காமராஜ், சங்கர பாண்டியன் ஆகிய இருவரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.