ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் மாவட்டத்தில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில், இயற்கையை ரசிக்க சுற்றுலா பயணியர் மீது ராணுவ சீருடையில் வந்த பயங்கரவாதிகள், அப்பாவி மக்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலில் இரண்டு வெளிநாட்டினர் உட்பட, 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவத்திற்கு அமெரிக்கா, ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அரசு முறைப்பயணமாக சவுதி அரேபியா சென்றுள்ள பிரதமர் மோடி காஷ்மீர் தாக்குதல் சம்பவம் எதிரொலியாக, பயணத்தை பாதியில் ரத்து செய்துள்ளதாகவும், இன்று இரவே நாடு திரும்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதையடுத்து நாளை காலை இந்தியா வந்திறங்குகிறார். தொடர்ந்து பாதுகாப்பு தொடர்பான் மத்திய அமைச்சரவை கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்த உள்ளார். இக்கூட்டத்தில் உள்நாட்டு பாதுகாப்பு உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பான ஆலோசனை நடத்த உள்ளார்.