விருதுகளா..? ரசிகர்கர்களா..? எது முக்கியம்..? சாய் பல்லவி நச் பதில்..?
Seithipunal Tamil April 23, 2025 09:48 AM

நடிகை சாய் பல்லவி நடிப்பில் இறுதியாக வெளியான 'அமரன், தண்டேல்' ஆகிய இரு படங்களும் வெற்றி பெற்றது. தற்போது இந்தியில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணம் படத்தில் சீதா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சாய்பல்லவி சமீபத்தில் நடந்த நேர்காணலில் எனக்கு விருதுகளை விட ரசிகர்களின் அன்பு தான் முக்கியம் என்று கூறியுள்ளார். அதாவது, "தியேட்டரில் ரசிகர்கள் என் கதாபாத்திரங்களை பார்த்து அந்த எமோஷன் உணர்வுகளுடன் தங்களை இணைத்து கொள்வதை உண்மையான வெற்றியாக பார்க்கிறேன். கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களுக்கு நேர்மையாக சொல்லக்கூடிய கதைகளை மட்டுமே சொல்ல வேண்டும் என்று எப்போதும் எதிர்பார்க்கிறேன்.

நான் நினைத்த மாதிரி அந்த கதாபாத்திரங்களில் எமோஷனுடன் ரசிகர்கள் கனெக்ட் ஆனார்கள் என்றால், அதுவே மிகப்பெரிய வெற்றியாக பாவிக்கிறேன். அதனால் தான் நான் எப்பொழுதும் விருதுகளை விட ரசிகர்களின் அன்பை பெற்றுக் கொள்வதற்கு முதல் முக்கியத்துவம் கொடுக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.