சர்வாதிகார ஸ்டாலின் அரசின் ஆட்டத்தை விரைவில் வீழ்த்துவோம் - ஜெயக்குமார்
Top Tamil News April 23, 2025 03:48 PM

ஜனநாயகம் என்னும் ஆயுதம் இந்த சர்வாதிகார ஸ்டாலின் அரசின் ஆட்டத்தை விரைவில் வீழ்த்தும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

இன்னும் எவ்வளவு முயற்சிகள் எடுத்து எதிர்க்கட்சிகளை பழிவாங்குவதில் வெறும் தோல்வியை மட்டுமே தழுவப் போகிறது இந்த சர்வாதிகார திமுக அரசு! யாரும் அரசுக்கு எதிராக எதுவும் பேசி விடக் கூடாது. குறிப்பாக கூட்டணி கட்சிகள் வெறும் அறிக்கை கூட அளித்து விடக்கூடாது!இதில் தான் திமுக அரசின் முழு கவனமும் உள்ளது. நில அபகரிப்பு என்ற பெயரில் என் மீது திமுக அரசால் போடபட்ட பொய் வழக்கு உயர்நிதிமன்றத்தால் உடைத்தெறியப்பட்டு உண்மை நிலை நாட்டப்பட்டது.இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது திமுக அரசு. 

இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் திமுக அரசின் மேல்முறையீட்டு மனுவை அரசியல் சாயம் இருப்பதாக கடுமையாக விமர்சித்து தள்ளுபடி செய்தது. கச்சத்தீவு முதல் காவிரி வரை எத்தனையோ மாநில நலன் சார்ந்த வழக்குகளில் கவனம் செலுத்த இந்த முட்டாள் அரசு முயற்சி செய்யாமல் எதிர்கட்சிகளை முடக்குவதில் தான் குறியாக உள்ளது. ஜனநாயகம் என்னும் ஆயுதம் இந்த சர்வாதிகார ஸ்டாலின் அரசின் ஆட்டத்தை விரைவில் வீழ்த்தும் என குறிப்பிட்டுள்ளது

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.