முதல்வர் ஸ்டாலினுக்கு 37 வயசு தான்... நடிகர் ஜீவா புகழராம்..!
Dinamaalai April 23, 2025 10:48 PM

சென்னை அம்பத்தூரில்  தனியார் திருமண மண்டபத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.  இந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் நடிகர் ஜீவா கலந்து கொண்டு முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து பேசினார். அதில் அவர்  தமிழக முதல்வர் ஸ்டாலினின் வயது 73. ஆனால் அதனை தலைகீழாக 37 வயது என்றுதான் சொல்ல வேண்டும்.

 அவர் அவ்வப்போது உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள் மற்றும் சைக்கிளில் செல்லும் வீடியோக்கள் போன்றவைகள் வெளியாகி ஊக்கப்படுத்துகின்றன.  தல்வர் ஸ்டாலின் நான் நடித்த சிவா மனசுல சக்தி திரைப்படத்தை பார்த்துவிட்டு இந்தப் படத்தின் இயக்குனர் இயக்கத்தில் உதயநிதியை நடிக்க வைக்கலாம் எனக் கூறினார்.  
அதன் பிறகுதான் உதயநிதி நடிப்பில் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் வெளிவந்தது. இந்த படத்தை இயக்குனர் ராஜேஷ் எடுத்தது எனக்கு மிகவும் பெருமையான விஷயம் எனக் கூறியிருந்தார்.  நடிகர் ஜீவா முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில்  வைரலாகி வருகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.