அஜித்துடன் மங்காத்தா படத்தில் பிரேம்ஜி நடித்துள்ளார். அந்த வகையில் தற்போது இளையராஜாவின் பாடல்கள் அனுமதியின்றி குட் பேட் அக்லியில் பயன்படுத்தியுள்ளது காப்பிரைட் பிரச்சனையை உருவாக்கி உள்ளது. இதற்கு தயாரிப்பாளர் தரப்பும் யாரிடம் அனுமதி வாங்கணுமோ அவரிடம் வாங்கியாச்சு என்று பதிலடி கொடுத்துவிட்டது. கங்கை அமரனும் இளையராஜாவுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்து இருந்தார்.
அண்ணனின் பாடல் வரும்போது மட்டும் கைதட்டுறாங்க. அந்த வகையில் கோடிக்கணக்கான சம்பளம் கொடுத்து தனியாக இசை அமைப்பாளரை வைத்து இருக்கிறார்கள். அவர் போடும் பாடலுக்கு யாரும் ஆடவில்லை. அமைதியாக இருக்கிறார்கள். அண்ணனின் பாடலுக்குத் தான் கைதட்டுறாங்க. விசில் அடிக்கிறாங்க. அப்படின்னா அவரு கேட்குறதுல என்ன தப்பு என்று பேசி இருந்தார்.
அந்த வகையில் பிரேம்ஜியிடம் இதே கேள்வி கேட்கப்பட்டது. நீங்க யாரும் பதில் சொல்லாம இருக்கீங்களே என்றதும் அவர் பட்டென்று இப்படி சொல்லி விட்டார்.
அண்ணனுக்கும் படத்துக்குமான காபிரைட் பிரச்சனை. அவங்க அண்ணனுக்கு கங்கை அமரன் சப்போர்ட் பண்ணி பேசுறாரு. இப்போ எங்க அண்ணனைப் பத்தி ஏதாவது வந்ததுன்னா நான் சப்போர்ட் பண்ணிப் பேசுவேன். அந்த மாதிரிதான். அஜித் படம் இளையராஜா பாடல்களை வைத்துத்தான் ஓடுதுன்னு சொல்றாங்க. அதெல்லாம் சும்மா.
தலன்னாலதான் அந்தப் படம் ஓடும் என்றார் பிரேம்ஜி. ராயல்டி என்பது எல்லா மியூசிக் கம்போசர்ஸ், சிங்கர்ஸ்க்கு கூட ராயல்டி இருக்கு. அது எல்லாருக்குமே வர்ற விஷயம்தான். மியூசிக் உருவாக்குற எல்லாருக்குமே ராயல்டி வந்துக்கிட்டுதான் இருக்கு. நானே 15 படம் மியூசிக் பண்ணிருக்கேன். எனக்கும் வந்துக்கிட்டுத்தான் இருக்கு. பெரியப்பா கேட்குறது அவருக்கானதைக் கேட்குறாரு என்கிறார் பிரேம்ஜி.