அரசியலுக்கு வந்த பிறகு இப்படி நடிக்கலாமா? ஜனநாயகனில் இப்படியெல்லாமா வர்றாரு விஜய்?
CineReporters Tamil April 24, 2025 05:48 AM

Jananayagan: தற்போது விஜய் எச் வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்க இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது. படத்தை பற்றி வலைப்பேச்சு அந்தணன் பல்வேறு தகவல்களை கூறி இருக்கிறார். ஜனநாயகனில் விஜய்க்கு 275 கோடி சம்பளம் என ஒரு தகவல் பரவி வருகிறது.

ஆனால் 275 கோடி இருக்காது. வேண்டுமென்றால் 250 கோடி இருப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக அந்தணன் கூறினார். மேலும் இந்த படத்தின் தமிழ்நாடு ரைட்சை வாங்குவதற்கு பல நிறுவனங்களுக்கு இடையே போட்டி நிலவி வருவதாகவும் கூறினார். ஏற்கனவே குட் பேட் அக்லி திரைப்படத்தின் தமிழ் நாடு தியேட்டர் உரிமையை ராகுல் 65 கோடிக்கு கைப்பற்றினார்.

அதே ராகுல்தான் இந்த படத்தை 100 கோடிக்கு கைப்பற்றுவார் என தெரிகிறது. இருந்தாலும் இன்னும் பல நிறுவனங்கள் இந்த படத்தை வாங்குவதற்கு வரிசையில் நிற்பதாகவும் அந்தணன் கூறினார். அது மட்டுமல்ல படத்தில் விஜய் எந்த மாதிரி கதாபாத்திரத்தில் வருகிறார் என்றும் தெரிவித்திருக்கிறார். ஜனநாயகன்படத்தை பொறுத்த வரைக்கும் இது பகவந்த் கேசரி படத்தின் ரீமேக்.

அதில் பாலையா போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். அதனால் இந்த படத்திலும் விஜய் போலீஸ் அதிகாரியாக நடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. இன்னும் சிலர் சமூக போராளியாக வருகிறார் என்றும் கூறி வருகிறார்கள். அதற்கும் வாய்ப்பு இருக்கிறது .ஏனெனில் பல்வேறு வேடங்கள் இந்த படத்தில் இருப்பதால் அந்த ஒரு கேரக்டருக்கும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஆனால் எம்ஜிஆர் மாதிரி ஒரு பெரிய அரசியல் தலைவராக வரவேண்டும் என நினைத்துக் கொண்டு அதற்கு ஏற்ற மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும். அப்படித்தான் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஆசையில் தலைவன் படத்தில் இருந்து அரசியல் கருத்துக்களை முன் வைப்பது அரசியல் வசனங்களை தைரியமாக பேசுவது என அடுத்தடுத்து அவர் படங்களில் பார்க்க முடிந்தது.

ஆனால் கோட் திரைப்படத்தில் வில்லனாக அவர் நடித்திருக்கவே கூடாது. ஏனெனில் மக்கள் சினிமா தான் நிஜம் என நினைத்து வருகிறார்கள். அதுவும் அரசியலில் இறங்கிய பிறகு இந்த மாதிரி வில்லன் கதாபாத்திரத்தில் அவர் நடித்தது ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அதே மாதிரி தான் ஜனநாயகன் திரைப்படத்திலும் நல்ல ஒரு கதாபாத்திரம் ஏற்று அவர் நடிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு ஏதோ கடைசி படம் என நினைத்துக் கொண்டு கிடைத்த ரோலில் நடித்தால் அது அவருடைய அரசியலுக்கு மைனஸ் ஆக தான் போய்விடும். அதனால் அதை பார்த்து புரிந்து கொள்ள வேண்டும் விஜய் என அந்தணன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.