மாணவர்கள் உற்சாகம்... ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறப்பு!
Dinamaalai April 24, 2025 09:48 AM

 

தமிழகம் முழுவதும் மாநில கல்வித்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு தற்போது கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு விடுமுறை முடிந்து ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 


அரசு பள்ளிகளில் ஆறு முதல் 9 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளையுடன் ஆண்டு இறுதித் தேர்வுகள் முடிவடைந்து, கோடை விடுமுறை தொடங்குகிறது. பள்ளி திறப்புக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறு தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.  


ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்து பணியினை முடித்து தேர்வு முடிவினை வெளியிட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக ஆசிரியர்களுக்கான பள்ளி இறுதி வேலை நாள் ஏப்ரம் 30 எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.