டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் மற்றும் மேலாளர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்..!
Seithipunal Tamil April 25, 2025 07:48 AM

சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை சோதனை நடத்தினர். கடந்த மார்ச் 06-ந்தேதி முதல் 08-ந்தேதி வரை சுமார் 60 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

அத்துடன், இந்த சோதனையின்போது ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அறிவித்திருந்தது.

இந்நிலையில், டாஸ்மாக் நிறுவனங்கள் தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனை தொடர்பாக, டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் விசாகன் மேலாளர்கள் சங்கீதா மற்றும் ராம துரைமுருகன் ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அளித்துள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.