பொதுவாக முந்திரி பருப்பில் நம் உடலுக்கு தேவையான ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது .இந்த பருப்பில் நல்ல இதயத்துக்கு தேவையான நல்ல கொழுப்பு நிறைய அடங்கியுள்ளது ,ஆனால் நிறைய பேர் இதில் இருக்கும் கொழுப்பு கெடுதலை உண்டாக்கும் என்று தவறான தகவலை கூறுகின்றனர் முந்திரி பருப்பின் ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.சிலர் அடிக்கடி செரிமான கோளாறுகளை சந்தித்து வருவர் .அப்படிப்பட்டவர்களுக்கு முந்திரி நல்ல பலனை கொடுக்கும் .
2.மேலும் எலும்புகள் நரம்புகள் ஆரோக்கியமாக இருக்க முந்திரி உதவுகிறது ,
3.மேலும் ரத்த அழுத்தம் நார்மலாக இருக்கவும் இந்த பருப்பு பயன் தரும் .மேலும் இதன் ஆரோக்கிய நன்மைகளை பார்க்கலாம்
4.சிலருக்கு எலும்பு பிரச்சினையிருக்கும் .பாலில் ஊறவைத்த முந்திரி பருப்பை உண்பதால் எலும்புகள் ஆரோக்கியமாக மாறும். இதனை இரவில் ஊறவைத்து, மறுநாள் காலையில் உண்டால், நம் உடலுக்கு கால்சியம் சத்து மிகுதியாக கிடைக்கும்.
5.முந்திரியில் வைட்டமின் ஏராளமாய் காணப்படுகின்றன. இவை அனைத்தும் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
7.முந்திரி பருப்பில் காணப்படும் நார்ச்சத்து மலச்சிக்கலைத் தடுக்கும்,